சுஜித் உன் உடலை எடுத்துவிட்டோம் ! ஆனால் நாங்கள் துயரக்குழியில் விழுந்து விட்டோம் ! எங்களை யார் மீட்பது ? நடிகர் விவேக் உருக்கம் !!

Published : Oct 29, 2019, 09:17 AM IST
சுஜித் உன் உடலை எடுத்துவிட்டோம் !  ஆனால் நாங்கள் துயரக்குழியில் விழுந்து விட்டோம் ! எங்களை யார் மீட்பது ? நடிகர் விவேக் உருக்கம் !!

சுருக்கம்

கண்ணே சுஜித் உன்னோட உடலை எடுத்துட்டோம்  ஆனால் நாங்க எல்லோரும் துயரக்குழியில் விழுந்துவிட்டோம்… எங்களை யார் மீட்பது ? என நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். 

இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அயராத முயற்சியில் ஈடுபட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்பார்வை செய்தனர். 

80 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்ற நிலையில்,   இன்று (அக்.,29) அதிகாலை, சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். 

சுஜித் நலமுடன் மீட்கப்படுவான் என்று அவரது குடும்பத்தினர் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில், சுஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சுஜித் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு ஃபாத்திமா புதூர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் காட்டுப்பட்டி கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் , கடந்த 4 நாட்களாக உணவு உறக்கம் இன்று உழைத்து களைத்துப போன அனைவருக்கும் நன்றி.

ஆனால் சுஜித் உன் உடலை குழிக்குள் இருந்து மீட்டுவிட்டோம்… நாங்கள் துயரக்குழிக்குள் வீழ்ந்துவிட்டோர் எங்களை யார் மீட்பது ? என தனது சோகத்தை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?