
'பாகமதி' படத்திற்குப்பின் அனுஷ்கா நடித்துவரும் படம் 'நிசப்தம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 5 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில், அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
அஞ்சலி, ஷாலினி பாண்டே என மேலும் இரு ஹீரோயின்களும் முக்கிய கதாபாத்தில் நடிக்கின்றனர்.
ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இந்தப் படத்துக்கு, கோபிசுந்தர் இசையமைக்கிறார். திரில்லர் ஜானரில் உருவாகும் 'நிசப்தம்' படத்தில், சாக்ஷி என்ற கேரக்டரில் வாய்பேச முடியாத ஓவியராக நடித்துள்ளார்.
அந்தோணி என்ற கேரக்டரில் பார்வையற்ற இசைக்கலைஞராக மாதவன் நடித்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில், நிசப்தம் டீசர் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு ப்ரீ டீசரையும் வெளியிட்டுள்ளது. அன்றைய தினம் அனுஷ்காவின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்களுக்கு அளிக்கும் ட்ரீட்டாக 'நிசப்தம்' டீசர் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.