குழந்தை பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கியூட் பேபியோடு புகைப்படம் வெளியிட்ட சுஜா வருணி!

Published : Aug 24, 2019, 11:53 AM ISTUpdated : Aug 24, 2019, 11:55 AM IST
குழந்தை பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் கியூட் பேபியோடு புகைப்படம் வெளியிட்ட சுஜா வருணி!

சுருக்கம்

பிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு கடந்த 21 ஆம் தேதி, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில், அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், இவர் தனக்கு மருத்துவம் பார்த்த, மருத்துவர், குழந்தை, கணவர் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

கடந்த சில வருடங்களாக நடிகை சுஜா வருணி மற்றும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

திருமணம் ஆன புதிதில் இருந்து, தன்னுடைய கணவருடன் மிகவும் நெருக்கமாக எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சுஜா. அதே போல் ஒரு நாள் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் தெரிவித்தார்.

சமீபத்தில் கூட இவருக்கு மிகவும் விமர்சியாக வளையக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இது குறித்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன் சுஜா மற்றும் சிவகுமார் தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சிவகுமார் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், தன்னுடைய சிம்பா பிறந்து விட்டதாக மிகவும் பெருமையுடன் கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து, தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி கூறும் விதத்தில், மருத்துவர் மற்றும் குடும்பத்தோடு சேர்த்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுஜா. இவரின் இந்த செயல், பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ
நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!