
சாண்டி மாஸ்டர் வீட்டில் அதிரடியாக நுழைந்த அபிராமி..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?
தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அஜித் நடித்து பெரும் வெற்றியை கொடுத்த நேர்கொண்டபார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிராமிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் தன்னுடன் இருந்த சக போட்டியாளரான சாண்டி மாஸ்டர் அவர்களின் வீட்டிற்கு திடீரென விசிட் செய்து உள்ளார்.
அபிராமி பிக்பாஸ் வீட்டில் உள்ள போது சாண்டி தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தன்னுடைய குழந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் தெரிவித்து இருந்தார். கன்பஷன் ரூமில் பேசும்போதும் குழந்தையை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்து அழுது புலம்பினார். இந்தநிலையில் அபிராமி சாண்டியின் வீட்டிற்கே சென்று சாண்டியின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு ஆறுதலாக பேசியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அபிராமி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பிக்பாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.