காதலர் தினத்தை கேக் வெட்டி, மது அருந்தி கொண்டாடி மகிழ்ந்த சுஜா வருணி - சிவகுமார் ஜோடி!

Published : Feb 14, 2019, 02:00 PM IST
காதலர் தினத்தை கேக் வெட்டி, மது அருந்தி கொண்டாடி மகிழ்ந்த சுஜா வருணி - சிவகுமார் ஜோடி!

சுருக்கம்

கடந்த வருடம் நவம்பர் மாதம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சுஜாவாருணி. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணத்திற்கு பின் முதல் முறையாக கொண்டாடும் காதலர் தினத்தை,  கேக் வெட்டியும், மது அருந்தியும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.  

கடந்த வருடம் நவம்பர் மாதம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சுஜாவாருணி. இந்நிலையில் தற்போது இருவரும் திருமணத்திற்கு பின் முதல் முறையாக கொண்டாடும் காதலர் தினத்தை,  கேக் வெட்டியும், மது அருந்தியும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

15  வயதில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிய சுஜா வருணிக்கு திரையுலகில் பெரிதாக வரவேற்பு கிடைக்காததால், சில படங்களில்  ஐட்டம் டான்ஸ், மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தார்.

ரசிகர்களால்,  மறக்கப்பட்ட இவரை மீண்டும் நினைவு படுத்தியது என்றால் அது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடி இவர், எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியேறினாலும், ஓவியாவை போல் இருக்க முயற்சித்தார் என பலர் இவரை விமர்சித்தனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அணுகியபோது, திருமணம் ஏற்படுகள் நடைபெற்று வந்ததால் திரைப்படங்களில் இவரால் நடிக்க முடியவில்லை.

மேலும் பல வருடங்களாக காதலித்து வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரன் சிவகுமாரை திருமணம் செய்து கொண்டார்.  அவ்வப்போது,  கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்குகளை அல்லி வருகிறார் சுஜா.

இந்நிலையில் திருமணத்திற்கு பின், இருவரும் இணைந்து இந்த வருடம் காதலர் தினத்தை கணவன் மனைவியாக கொண்டாடியுள்ளனர். இருவரும் நீல நிற உடை அணிந்து, கேக் வெட்டியும், மது அருந்தியும் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....