
சீரியல் நடிகை ரேகாவின் கணவர், கோபிநாத் கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலால், அவருடைய அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்து வெளியாகி சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்ச்சியடைய வைத்தது.
கடந்த ஓரிரு மாதமாகவே சீரியல் பிரபலங்கள் பற்றிய விஷயம் சமூக வலைத்தளத்தில் தீயாய் கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில்... இப்படி ஒரு தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் சீரியல் நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத், அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே, அடிக்கடி பிரச்சனை வந்ததாகவும், அது மட்டும் இன்றி, கடன் பிரச்சனையிலும் கோபிநாத் சிக்கி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
எனவே கிறிஸ்துமஸ் தினத்தன்று மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனைக்கு பின், அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரிடம் இருந்த சாவியை பயன்படுத்தி, கதவை திறந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அலுவலகம் வந்த ஊழியர்கள் கோபிநாத் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதல் விவாகரம் மற்றும் கடன் தொல்லையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்நிலையில், இதுகுறித்து, ஏசியாநெட் செய்தியாளர் அவரிடம் தொலைபேசியில் விசாரித்த போது, இறந்த கோபிநாத்தின் மனைவியின் பெயர் ஜெனிபர் ரேகா என்றும், ஆனால் பலரும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். அந்த ரேகா நான் இல்லை என கூறியுள்ளார்.
ரேகா தொகுப்பாளினியாகவும், ஓவியா, நாம் இருவர் நமக்கு இருவர், போன்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.