இயக்குனர் மணிரத்னம் இதை மறைத்து விட்டாரே...! ரகசியத்தை வெளியே கூறிய சுஹாசினி..!

First Published Mar 4, 2018, 2:04 PM IST
Highlights
suhasini about the manirathnam important news


இந்திய சினிமாக்களில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். 'பல்லவி அனு பல்லவி' என்கிற கன்னடப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் மலையாளத்தில் உணரு என்கிற படத்தை இயக்கினார் இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.

1985ஆம் ஆண்டு பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து இதயகோயில், மௌனராகம், நாயகன், அஞ்சலி, அக்னிநட்சத்திரம் ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இவர் இயக்கும் படத்திற்கு தனி ரசிகர் வட்டாரத்தையும் ஏற்படுத்தியது. 

தற்போதைய படம்:

தற்போது 'செக்கச்சிவந்த வானம்' என்ற மல்டி ஹீரோ படத்தை தன்னுடைய 38வது படமாக இயக்கி வருகிறார். கடந்த 35 வருடங்களாக இயக்குனராக இருக்கும் இவரைப் பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை அவருடைய மனைவியும் நடிகையுமான சுஹாசினி தற்போது வெளியிட்டுள்ளார்.

உதவி இயக்குனர்;

இயக்குனர் மணிரத்னம் புனேவில் உள்ள இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து விட்டு நேராக படம் இயக்க வந்து விட்டார் என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரும் ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இந்த தகவலை நேற்று சென்னையில் நடைப்பெற்ற 'அபியும் அனுவும்' படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துக்கொண்ட சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சுஹாசினி கூறுகையில்... 

மணிரத்னம் எந்த இயகுனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அனால் அவர் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வந்த பிறகு பி.ஆர். ரவீந்திரன் கன்னடத்தில் விஷ்ணுவர்தனை வைத்து இயக்கிய ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகுதான் மணிரத்னம் தனித்து படம் இயக்க துவங்கினார். இந்த விஷயம் வெளியில் தெரியாததால் அவர் எந்த இயகுனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார் சுஹாசினி. 

click me!