
நடிகை மீனா... ரஜினி, கமல், சரத்குமார், என பல முன்னணி நடிகர்களுடன் 90 களின் கதாநாயகியாக நடித்தவர். தற்போது ஒரு சில திரைப்படங்கில் அம்மா, அண்ணி போன்ற முக்கிய கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மகள் நைனிகா:
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்கிற பழமொழிக்கு ஏற்ப்ப, மீனாவை மிஞ்சும் அளவிற்கு நடித்து வருகிறார் நடிகை மீனாவின் மகள் நைனிகா.
இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜயுடன் நடித்து வெளிவந்த தெறி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
மீனாவின் கனவு:
இந்நிலையில் தற்போது நைனிகா, பிரபல இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நைனிகா நடித்துள்ளது பற்றி மீனா கூறுகையில், நடிகர் விஜய் சூர்யா நடித்து மிக பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான பிரண்ட்ஸ் படத்தை சித்திக் இயக்கியபோது முதலில் மீனாவை தான் தேவயாணி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க அழைப்பு விடுத்தாராம்.
ஆனால் அந்த சமயத்தில் மீனா ஒரு சில படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. பின் இந்த படத்தில் நடிக்க முடிய வில்லை என்று வருதப்பட்டுள்ளேன்.
இந்த படத்தை தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் நடிக்க எனக்கு வாய்புகள் வரவில்லை. ஆனால் என்னுடைய மகளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் என்னுடைய ஆசையை மகள் நிறைவேற்றிவிட்டால் அவள் நடித்து நானே நடித்து போல் உணர்ந்தேன் என்றார் மீனா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.