திடீரென அஜித் - விஜய் ரசிகர்களுக்கு வந்த ஞானோதயம்... இவ்வளவு நாட்களா எங்கே போனது இந்த புத்தி..?

Published : Dec 04, 2019, 12:21 PM IST
திடீரென அஜித் - விஜய் ரசிகர்களுக்கு வந்த ஞானோதயம்... இவ்வளவு நாட்களா எங்கே போனது இந்த புத்தி..?

சுருக்கம்

 நன்றி நண்பா எனக்குறிப்பிட்டு விஜயும் அஜித்தும் நட்போடு பேசிக்கொள்ளும் வகையில் ஒரு கார்ட்டூனை வரைந்து சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   

விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு மோதி அவரவர் ஹீரோக்களை அசிங்கப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெறித்தனம் காட்டும் விஜய் ரசிகர்களுக்கு கார்ட்டூன் மூலம் புத்தி புகட்டி உள்ளனர் அஜித் ரசிகர்கள். 

நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 27வது ஆண்டை இந்திய அளவில் வெறித்தனத்தோடு கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். 

இந்நிலையில், ட்விட்டர் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியை கொண்டாட #27YrsOfKwEmperorVIJAY என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.  இதில் உச்சபட்ச சாதனை என்னவென்றால் இதுவரை எந்த நடிகரின் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கும் இல்லாத வகையில் விஜய்க்காக அவரது ரசிகர்கள் 14 லட்சம் பேர் ஹேஸ்டாக்கை பயன்படுத்தி பதிவிட்டுள்ளனர்.

 

இதற்கு போட்டியாக அஜித் ரசிகர்களும் #மக்கள்தலைவன்அஜித்  #Viswasam ஆகிய ஆகிய ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 27- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தளபதி விஜய்க்கு தல ரசிகர் மன்றத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் என அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய் ரசிகர் ஒருவர், நன்றி நண்பா எனக்குறிப்பிட்டு விஜயும் அஜித்தும் நட்போடு பேசிக்கொள்ளும் வகையில் ஒரு கார்ட்டூனை வரைந்து சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?