BiggBoss Julie: காதலன் மீது மோசடி புகார் கொடுத்த விவகாரம் - போலீஸ் விசாரணையில் டுவிஸ்ட்... வசமாக சிக்கிய ஜூலி

Ganesh A   | Asianet News
Published : Dec 04, 2021, 07:37 PM IST
BiggBoss Julie: காதலன் மீது மோசடி புகார் கொடுத்த விவகாரம் - போலீஸ் விசாரணையில் டுவிஸ்ட்... வசமாக சிக்கிய ஜூலி

சுருக்கம்

ஜூலியும், மனிஷும் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழித்த போலீசார், ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜூலி. இந்நிகழ்ச்சிக்கு பின் படங்களில் நடித்து வந்த ஜூலி, தற்போது மாடலிங்கில் படு பிசியாகி விட்டார். ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஜூலி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைந்தகரையை சேர்ந்த மனிஷ் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறி தன்னிடம் பணம், தங்க நகை உள்பட இரண்டரை லட்சம் மதிப்பிலான பொருட்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மனிஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு பிரச்சனை எழுந்தபோது மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதன்மூலம் ஜூலிக்கும், மனிஷூக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது பின்னர் காதலாக மாறியுள்ளது.

இருவரும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக மனிஷ் உடனான காதலை துண்டித்து, அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஜூலியின் இந்த திடீர் முடிவை தாங்கிக்கொள்ள முடியாத மனிஷ், அடிக்கடி ஜூலிக்கு போன் செய்து தன்னை விட்டு பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் நீ இல்லாமல் தன்னால்  வாழ முடியாது எனவும் கூறி அழுதுள்ளார்.

இதனால் மனிஷை மிரட்டுவதற்காகவே தற்போது ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து, ஜூலி வாங்கித் தந்த நகை, பைக் உள்ளிட்ட சில பொருட்களை போலீசார் முன்னிலையில் திருப்பி அளித்துள்ளார்.

மேலும் ஜூலியும், மனிஷும் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழித்த போலீசார், ஜூலி மற்றும் மனிஷ் ஆகிய இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலன் மீது பழிபோட்ட ஜூலியே காதலை துண்டித்துள்ள விஷயம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என் திருமணக் கனவு அதுதான்: காதலர் சாந்தனுவுடன் வாழ்வு குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்!
விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!