
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாக தமிழகத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் கூட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களை பொறுக்கிகள் என்று கூறிய சு.சுவாமி கமல், ரஜினி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கமல், ரஜினி இருவரையும் கோழைகள் என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரை அகங்காரம் பிடித்த முட்டாள். ரஜினிகாந்த் இலங்கைக்கு பயந்து கொண்டு அங்கு செல்வதை ரத்து செய்து விட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக்கொள்ளும் போது அனைத்தையும் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பிறகு தான் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
சினிமாக்காரர்களுக்கு எப்பவும் பயம் தான். இதில், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் கோழைகள் என்று சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சுவாமியின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கமல், ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.