கன்னியாகுமரியில் நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை...கலாய்க்கும் அஜீத் ரசிகர்கள்...

By Muthurama Lingam  |  First Published Nov 23, 2019, 11:05 AM IST

நடிகர் விஜய்க்கு தமிழகத்தின் கடைக்கோடி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மெழுகு சிலை அமைத்திருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சிலை மேட்டரையும் வழக்கம் போல் அஜீத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
 


நடிகர் விஜய்க்கு தமிழகத்தின் கடைக்கோடி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மெழுகு சிலை அமைத்திருப்பது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அச்சிலை மேட்டரையும் வழக்கம் போல் அஜீத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு இன்று மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

Latest Videos

இந்த அருங்காட்சியகத்தில் ஏற்கனவே அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான ஜாம்பவான்களான 20 பேருக்கான சிலைகள் மட்டுமே உள்ளன . அந்த முக்கியமானவர்கள் பட்டியலில் தற்போது நடிகர் விஜய்  மெழுகு சிலையும் இணைத்துள்ளது .தமிழ் நடிகர்களில் விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில் சிலை உள்ளது .விஜய்யின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர் .

click me!