
தெறி படத்தின் வெற்றியை அடுத்து மெர்சலுக்காக தளபதியுடன் கைகோர்த்துள்ள அட்லீ ரசிகர்களை மெர்சலாக்க மூன்று நாயகிகள், மிரட்டும் வில்லன்கள் என தீபாவளிக்கு ட்ரீட் தர பக்காவாக தயாராக வைத்துள்ளார்.
தளபதி விஜய்யின் மெர்சல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மிகுந்த எதிர் பார்க்கும் அளவிற்கு ஒரு ஆவலை ஏற்படுத்தியுள்ளது. வரும் தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு இது தான் மிக பெரிய விருந்து என்று கூட சொல்லணும் தமிழ் ரசிகர்களுக்கும் மட்டும் இல்லை தெலுங்கு ரசிகர்களுக்கும் இந்த தீபாவளிக்கு மெர்சல் மெகா ட்ரீட்டாக இருக்க போகிறது என்று தெலுங்கு சினிமா வட்டாரம் பெருமையாக சொல்லி வருகிறது.
முதல் முறையாக விஜய் படம் தீபாவளிக்கு மிக பெரிய அளவில் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகள் மிக பெரிய அளவில் தெலுங்கு உரிமம் வாங்கியுள்ள தயாரிப்பாளர் செய்து வருகிறார். மேலும் இப்படத்தின் டீசர் இன்று இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குனரான ராஜமௌலி இன்று வெளியிடுகிறார்.
'மெர்சல்' டீசர் வெளியிட்டை பற்றியும் படத்தை பற்றியும் பேசிய ராஜமௌலி மெர்சல் மிக சிறந்த படமாக வரும் என்று கூறினார் அதோடு இந்த வருடத்தின் நிச்சயம் ஒரு முக்கிய படமாக அமையும் என்றும் கூறினார். அதோடு இயக்குனர் அட்லீக்கும் விஜய்க்கும் வாழ்த்து தெரவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.