மனைவியின் கள்ளத் தொடர்பை வெளிப்படுத்திய தாடி பாலாஜி!

 
Published : Sep 30, 2017, 11:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
மனைவியின் கள்ளத் தொடர்பை வெளிப்படுத்திய தாடி பாலாஜி!

சுருக்கம்

balaji open talk her wife

காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் இணைத்து பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் இருவரும் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு மேடையிலேயே சண்டை வந்தது. இதனைத் தொடர்ந்து நித்தியா திடீர் என தன்னுடைய ஜாதி பெயரை கூறி கணவர் தாடி பாலாஜி கொடுமைப் படுத்துகிறார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

தாடி பாலாஜி தன்னுடைய குழந்தையின் எதிர்காலத்திற்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியிருந்தார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், தற்போது தாடி பாலாஜி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக ஒரு புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாடி பாலாஜி, தன்னுடைய மனைவி நித்தியாவிற்கும், பைசல் என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது எனக்கு  தெரிய வரவேதான் எங்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறிய பாலாஜி, தற்போது தமிழ்நாடு காவல்துறை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் மனோஜ் குமார் என்பவர் பைசலுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய மனைவி நித்தியா விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று கூறி, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை மிரட்டியபோது எடுக்கப்பட்ட குரல் பதிவையும் கமிஷனரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு