
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளத்தில் உருவாகும் 'டீம் 5 ' என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக டார்லிங்' நிக்கி கல்ராணி' நடிக்க உள்ளார்.
பைக் ஸ்டண்ட் விளையாட்டில் மோதிக் கொள்ளும் அணிகளுக்கு இடையிலான போட்டியே இந்த படத்தின் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீசாந்த் பைக் ஸ்டண்ட் சம்பந்தமாக பல விதமான வித்தைகளை கற்று வருவதாக கூறப்படுகிறது.
ஸ்ரீசாந்த், மேட்ச் பிக்சிங் பிரச்சனையில் சிக்கியதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு. தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.