
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, நடிகர்கள் , இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி திரையுலகையே அதிரவைத்தார். பிரபல இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், என இவர் குற்றம் சாட்டிய பெயர் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
சமீபத்தில், டெலிவிஷன் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போது, 'நான் ஈ' படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான நானி மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " நானி சினிமா வாய்ப்புக்காக போராடிய போது எனக்கும், அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் அவருக்கு புகை, மது, போதை பொருள் உள்ளிட்ட அணைத்து பழக்கமும் இருந்தது.
அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி என்னுடன் பாலியல் தொடர்பும் வைத்துக்கொண்டார். ஆனால் சொன்னபடி எனக்கு பட வாய்ப்புகள் பெற்று தருவார் என்று எதிர்பார்த்து ஏமர்தேன். ஒருநாள் மது பாட்டில்களுடன் எனது வீட்டுக்கு வந்த அவர் என்னையும் மது குடிக்க தூண்டினார். நான் அவரை எச்சரித்து அனுப்பினேன்.
இவர் இப்படி என்னை ஏமாற்றியதால் நானிக்கு எதிராக வழக்கு தொடர நான் விரும்பவில்லை. எனது நோக்கமே படவாய்ப்புக்கு படுக்கைக்கு அழைக்கும் வழக்கத்துக்கு எதிராக போராடுவதுதான் என ஸ்ரீரெட்டி கூறினார்.
ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டை தொடர்ந்து, இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நானியின் மனைவி அஞ்சனா, ஸ்ரீரெட்டி கூறுவது பொய் என மறுத்ததுடன், அதற்கு தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.