பணத்திற்கு மட்டுமே என்னை பயன்படுத்திய நித்தியா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எவ்வளவு கொடுத்தேன்! பாலாஜி ஓபன் டாக்!

Published : Feb 28, 2019, 02:47 PM ISTUpdated : Feb 28, 2019, 02:51 PM IST
பணத்திற்கு மட்டுமே என்னை பயன்படுத்திய நித்தியா? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எவ்வளவு கொடுத்தேன்! பாலாஜி ஓபன் டாக்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட பின் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது நித்தியா மற்றும் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் பிரச்சனை. இது இருவரும் சேர்ந்து விட்டார்கள் என நினைத்த ரசிகர்களை அதிச்சியாக்கியுள்ளது.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட பின் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது நித்தியா மற்றும் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் பிரச்சனை. இது இருவரும் சேர்ந்து விட்டார்கள் என நினைத்த ரசிகர்களை அதிச்சியாக்கியுள்ளது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன், மாதவரம் காவல் நிலையத்தில், நித்தியா, கணவர் தாடி பாலாஜி மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியவற்றை உடைப்பதாகவும். குழந்தை போஷிகாவை மிரட்டுவதாகவும் கூறி புகார் கொடுத்தார். இந்த புகார் மீதான விசாரணை தற்போது சென்றுகொண்டிருக்கிறது.

இதைத்தொடர்ந்து தற்போது நித்தியாவின் புகாருக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து, நித்தியாவின் புகார் குறித்து விளக்கம் கொடுத்தார். 

"அப்போது நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பாலாஜி. கடந்த இரண்டு வருடங்களை நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் வசித்து வருகிறேன். நித்தியா இருக்கும் வீட்டிற்கு செல்லவில்லை என கூறினார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு கூட நான் என் அம்மாவீட்டுக்கு தான் சென்றேன். தன்னை பணத்திற்காக மட்டுமே நித்தியா பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றம் சாட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஒரே வாரத்தில், 60 ரூபாய் நித்தியாவிற்கு பணம் கொடுத்துள்ளதாகவும். அதுவும் நான் சென்று கொடுக்க வில்லை நண்பர் மூலமாகவே அவரிடம் கொடுத்ததாக கூறினார். மேலும் போஷிக்கவின் பிறந்த நாள் அன்று குழந்தையை அழைத்து வருவதாக கூறி, பின் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி குழந்தையை கூட கண்ணில் காட்ட வில்லை என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!