மெர்சலுக்கு மாஸ் காட்டும் இலங்கை ரசிகர்கள்... கட் அவுட்டுக்கு மட்டும் இத்தனை லட்சமா..!

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
மெர்சலுக்கு மாஸ் காட்டும் இலங்கை ரசிகர்கள்... கட் அவுட்டுக்கு மட்டும் இத்தனை லட்சமா..!

சுருக்கம்

srilankan fans spend lakh of amout in vijay mersal cut out

அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்று வேடத்தில் நடித்து... மூன்று நாயகிகளுடன் டூயட் பாடியுள்ள மெர்சல் படத்தின் விஜயை பார்க்க விஜய்  ரசிகர்கள் ஒரு பக்கம் ஆரவாரத்தோடு தயாராகி வருகின்றனர். 

அதே நேரத்தில், கேளிக்கை வரி, சென்சார் பிரச்சனை, விலங்கு நல வாரியம் நோட்டீஸ் என ஒரு பக்கம் மெர்சலுக்கு வரும் பிரச்சனைகளும் நீண்டுகொண்டே போகிறது.

ஆனால் படம் வெளியாகும் என உறுதியான தகவல்களும் படக்குழுவினரிடம் இருந்து  வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் ஏற்கனவே வெளிநாடுகளில் மெர்சல் படத்திற்கான டிக்கெட் முன் பதிவுகள் முடிந்து விட்டது. அதே போல் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் மெர்சல் படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது.

தமிழகத்தை விட மெர்சல் படத்தை வரவேற்க மிகவும் தீவிரமாக உள்ளனர் இலங்கை ரசிகர்கள். மெர்சலை வரவேற்கும் விதத்தில் 80 அடியில் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட் வைத்துள்ளனர். இதற்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம்.

மேலும் பல இடங்களில் சிறிய அளவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட் அவுட் வைக்க 2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளார்களாம் இலங்கை ரசிகர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ
தளபதியின் தம்பிகள் பேசியது என்ன? அட்லீ, லோகேஷ், நெல்சன் ஸ்பீச் இதோ