தேசிய விருதை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன் - ஸ்ரீகாந்த் தேவா நெகிழ்ச்சி

By Ganesh A  |  First Published Oct 18, 2023, 1:29 PM IST

நான் பெற்ற தேசிய விருதை எனது தந்தைக்கு dedicate பண்ணுகிறேன் என மதுரை விமான நிலையத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி அளித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கருவறை என்னும் குறும்படத்திற்கு இசையமைப்பதற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் இசை அமைப்பாளரும், தேனிசைத் தென்றல் தேவாவின் மகனுமான ஸ்ரீகாந்த் தேவா பெற்றார். தேசிய விருது வாங்கிய கையோடு டெல்லியில் இருந்து இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஸ்ரீகாந்த் தேவா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “இந்த தேசிய விருது குறும்படத்திற்காக வழங்கப்பட்டது. இந்த விருது வாங்கியதற்கு எங்க அப்பா மிகவும் சந்தோசப்பட்டார். ஜனாதிபதி கையில் இந்த விருது வாங்கியது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழனாக இந்த விருது வாங்கியது பெருமையாக உள்ளது. இந்த விருது யாருக்காக டெடிகேட் பண்றீங்க என நேற்று எல்லோரும் கேட்டார்கள், இந்த விருது என் அப்பாவுக்காக அர்ப்பணம் செய்கிறேன்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தேசிய விருதை எனது தந்தைக்கு dedicate பண்ணுகிறேன் - இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேட்டி pic.twitter.com/QyMD2DSNq5

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

என் அப்பாவிடம் இல்லாத விருதுகளே இல்லை. ஆனால் இந்த விருது அவருக்கு சிறப்பான ஒன்று. எல்லா படத்திற்கும் விருது கிடைக்கும் என்றுதான் உழைக்கிறோம், எல்லா கலைஞர்களும் தேசிய விருது வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. 20 படங்களுக்கு மேலாக என்னுடைய படம் பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. இந்தப் படம் செய்யும்போது விருது கிடைக்கும் என நினைக்கவில்லை” என்றார்.

இதையும் படியுங்கள்... இக்கட ஷிவாண்ணா.. அக்கட பாலய்யா! பிற மாநிலங்களில் லியோவை பதம்பார்க்க காத்திருக்கும் பெரிய தலைகளின் படங்கள்

click me!