நடிகை ஹன்சிகா மோத்வானியின் வீட்டில் நிகழ்ந்த மரணம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் பெரியளவில் கிடைக்கவில்லை. இதனால் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த ஹன்சிகா, கடந்த ஆண்டு தன்னுடைய காதலனான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
ஜெய்ப்பூரில் உள்ள பழமைவாய்ந்த அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது ஹன்சிகாவின் திருமணம். கல்யாணத்துக்கு பின்னரும் சினிமாவில் நடிக்க கணவர் கிரீன் சிக்னல் காட்டியதால் தற்போது மீண்டும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி உள்ளார் ஹன்சிகா. சமீபத்தில் கூட ஆதிக்கு ஜோடியாக இவர் நடித்த பார்ட்னர் திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நடிகை ஹன்சிகாவுக்கு சினிமாவை எந்த அளவு பிடிக்குமோ அதே அளவு செல்லப்பிராணிகளை வளர்க்கவும் பிடிக்கும். இதனால் இவர் தனது வீட்டில் நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில், ஹன்சிகா தன் மகன்போல் வளர்த்து வந்த புரூஸோ என்கிற நாய்க்குட்டி தற்போது மரணம் அடைந்துள்ளது. அதன் மறைவு குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.
அந்த பதிவில், அன்புள்ள புருஸோ, உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம், என்னுடைய சிறந்த மகன் நீ. உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அமைதியாய் ஓய்வெடு, டெடி மற்றும் மர்பியும் உன்னை மிஸ் பண்ணுகிறார்கள். லவ் யூ என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சாபக்கல் கொடுத்து டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ்... நாமினேஷனில் சிக்கும் கூல் சுரேஷ்! அனல்பறக்கும் புரோமோ இதோ