
சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகைகளில் ஒருவர் ஸ்ரீரெட்டி, தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி இவர் போட்டுள்ள ஒரு பதிவு கீர்த்தி சுரேஷின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கோலிவுட், மற்றும் டோலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சிலர், தனக்கு பட வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக கடந்த வருடம் திரையுலகில் பூகம்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அடுக்கடுக்காக பல இயக்குனர்கள் நடிகர்கள் பெயரை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து தற்போது சென்னையில் செட்டில் ஆகி உள்ள ஸ்ரீரெட்டி 'ரெட்டியின் டைரி' என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ராகவா லாரன்ஸ் அடுத்ததாக இயக்க உள்ள படத்திலும் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தற்போது இவர் கீர்த்தி சுரேஷ் பற்றி போட்டுள்ள ட்விட்டில் கூறியுள்ளதாவது... "கீர்த்தி சுரேஷும் நானும் ஒரே விமானத்தில் பயணித்தோம். அவரை நான் உட்பட மற்றவர்கள் யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எல்லோரும் தன்னிடம் வந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கீர்த்தி சுரேஷ் அதிக உடல் எடையை குறைத்ததால் அவர் பார்ப்பதற்கு நோயாளி போல் தெரிந்தார் என கூறியுள்ளார். இதுதான் கீர்த்தியின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் சாய் பல்லவி பெஸ்ட் அண்ட் ராக்கிங் என் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.