
அனைத்து பிரபலங்கள் மீதும், குற்றம் சுமாற்றியே பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. முதல் முறையாக தன் மீது உள்ள தவறை உணர்ந்து, அவரின் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
நடிப்பின் மீது ஸ்ரீரெட்டிக்கு இருந்த, ஆர்வத்தை தெரிந்து கொண்டு, பலர் வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டு பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் மீது குற்றங்களை அடுக்கியவர் ஸ்ரீரெட்டி.
சிலர் இவர் கூறியதற்கு பதிலடி கொடுத்த போதிலும், பலர் கண்டுகொள்ள வில்லை. தெலுங்கு திரையுலகில் யாரும் இவருடைய பேச்சை காது கொடுத்து கேட்காததால், தற்போது... சென்னையில் செட்டில் ஆகியுள்ளார்.
மேலும் ரெட்டி டைரி என்கிற பெயரில் தன்னுடைய வாழ்க்கை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். ஒரு சில படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில், அன்னையர் தினத்தன்று அவருடைய அம்மாவிற்காக மிகவும் மனவருத்தத்துடன் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில், "மன்னித்து விடு அம்மா... உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. 'என்னுடைய பிறப்பை நினைத்து நான் வேதனை படுகிறேன், என்னை போன்ற ஒரு பெண்ணை எந்த தாயும் பெற்றிருக்க மாட்டாள். என்னை பெற்றது ஒன்று தான் உங்கள் தவறு. இதற்காக உங்களுக்கு மிகவும் கொடுமையான தண்டனையை கொடுத்து விட்டேன்.
நான் செய்யும் தவறுக்காக எல்லோரிடமும் திட்டு வாங்கி கொண்டிருக்கிறீர்கள். இந்த உடம்பு, உயிரை எடுத்து என்னை கொலை செய்துவிடுங்கள்' என்று கலங்கியவாறு கூறியுள்ளார்".
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.