தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர் பாலியல் குற்ற சாட்டை முன்வைத்த நடிகை ஸ்ரீரெட்டி. இதை தொடர்ந்து கோலிவுட் பிரபலங்கள் செய்த லீலைகளையும் வெளியிட்டார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர் பாலியல் குற்ற சாட்டை முன்வைத்த நடிகை ஸ்ரீரெட்டி. இதை தொடர்ந்து கோலிவுட் பிரபலங்கள் செய்த லீலைகளையும் வெளியிட்டார்.
இதனால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பின் உச்சத்தில் இருந்தது.
கடந்த சில தினங்களாக, பிரபலங்கள் பற்றிய எந்த தகவலையும் வெளியிடாமல். டப் மேட்ச் வீடியோ, டான்ஸ், ரியாக்ஷன் போன்றவற்றை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு முன்னணி காமெடி நடிகர் பிருத்வி தான் அடுத்ததாக ஸ்ரீரெட்டியின் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரெட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, பிருத்வி எப்படிப்பட்டவர், பெண்களை எவ்வாறு தவறாக பயன்படுத்தினார் என்பது திரையுலகில் இருக்கும் நடிகைகளுக்கு நன்றாக தெரியும்.
ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் சாலையில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவா? அமெரிக்கா சென்ற நடிகைகளை கேட்டால் அவர் கொடுத்த தொல்லைகள் பற்றி சொல்வார்கள் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.
மேலும் தற்போது தான் இவர், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இவரை பற்றி ஸ்ரீரெட்டி தெரிவித்திருக்கும் தகவல் தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.