பிக்பாஸ் முதல் சீசனின் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் பாடலாசிரியர் சிநேகன். தற்போது இவர் பாடல்கள் எழுதுவதை விட படங்கள் நடிப்பதில் மிகவும் பிஸியாக மாறிவிட்டார்.
பிக்பாஸ் முதல் சீசனின் கலந்து கொண்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் பாடலாசிரியர் சிநேகன். தற்போது இவர் பாடல்கள் எழுதுவதை விட படங்கள் நடிப்பதில் மிகவும் பிஸியாக மாறிவிட்டார்.
சமீபத்தில் மீண்டும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு வந்து, அனைத்து போட்டியாளர்களுக்கும் தமிழ் பாடம் எடுத்தார். பின் உலக நாயகன் கமலஹாசனிடம் உள்ளே உள்ளவர்கள் யாருமே உண்மையாக இருப்பது போல் தெரியவில்லை என்றும், நடித்து கொண்டிருப்பதாக கூறினார்.
undefined
ஏற்கனவே பிக்பாஸ் ரசிகர்கள் போட்டியாளர்கள் யாருமே சுய ரூபத்தை காட்டாமல், முகமூடி அணிந்து விளையாடி வருகிறார்கள் என்று பார்க்கப்பட்ட நிலையில் இவர் கூறியதும் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சினேகன், கோபிநாத் நடத்தி வரும் 'Divided' நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவருடன் பிக் பாஸ் காயத்திரி மற்றும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் முதலாவதாக வெளியேற்றப்பட்ட மமதி சாரி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
சிநேகன் உள்ளே வந்ததும், கோபிநாத்தை கட்டி பிடித்து, நட்பை வெளிப்படுத்தினார். அதே போல், காயதிரியையும் கட்டி பிடித்தார். அடுத்ததாக உள்ளே வந்த மமதி சாரியை கட்டி பிடிக்க பயந்து வணக்கம் போட்டார்.
மேலும் காயதிரியுடன் இணைந்து கல்யாண வயசு பாடலுக்கும் நடனம் ஆடி உள்ளார் இது குறித்த ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.