வாராகியை சும்மா விட மாட்டேன்..ஆக்ஷனில் இறங்கிய ஸ்ரீ ரெட்டி..!

 
Published : Jul 27, 2018, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
வாராகியை சும்மா விட மாட்டேன்..ஆக்ஷனில் இறங்கிய ஸ்ரீ ரெட்டி..!

சுருக்கம்

sri reddy gave complaints against varagi

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி வாராகி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் படுக்கையை  பகிர வேண்டும் என நடிகர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீ ரெட்டி தொடர் குற்றசாட்டை முன் வைத்து உள்ளார்.

தெலுங்கு திரை உலகில் நடிகர் நானி முதற்கொண்டு பல்வேறு  முன்னணி நடிகர்கள் மீது, பாலியல் புகார் தெரிவித்து வந்தார்.

பின்னர் கோலிவுட் பக்கம் திரும்பிய ஸ்ரீ ரெட்டி, இயக்குனர் ஏ.ஆர்  முருகதாஸ், நடன இயக்குனர் லாரன்ஸ், சுந்தர் சி, மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த்  என....இவர்கள் மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தி உள்ளார்

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த்திரையுலக பிரபலங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது விபச்சார தடுப்புப் பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாராகி தனது மனுவில்கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து  ஸ்ரீ ரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் வராகி எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும், கமிஷனர் அலுவலகம் சென்ற ஸ்ரீ ரெட்டி வராகி மீது புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரை உலகில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கால் பதிய வேண்டும் என்ற முயற்சியில், ஸ்ரீ ரெட்டி களத்தில் இறங்கி உள்ளார்.

தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக, தவறாக மட்டுமே பயன்படுத்திய விவகாரம் இனி நடைபெற கூடாது என்றும், தனக்கு நடிக்க வாய்ப்பு மட்டுமே கிடைக்க வேண்டும்....திறமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், வராகி மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!