
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கிய போது யார் மீதும் கோவம் கொள்ளாமல் இருந்த போட்டியாளர்கள் தற்போது ஒருவரை ஒருவர் தாக்கி பேசியும், தங்களுடைய கோவத்தை வெளிக்காட்டவும் துவங்கியுள்ளனர்.
மேலும் இது நாள் வரை ஒருவரை ஒருவர் பற்றி பின்னால் சென்று பேசாமல் இருந்த இவர்கள் தற்போது இந்த வேலையையும் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர் ஒருவர் மும்தாஜ் போல் பொன்னம்பலத்திடம் பேசிக்காட்டுகிறார். அதில் "பாவம் நீங்க காலையிலேயே இரண்டு தோசை தான் சாப்டீங்க, நான் ஒரு தோசை கொடுத்தேன் என கூறுகிறார்". இதற்கு பொன்னம்பலம் இதையும் சொல்லி காட்டுகிறாரா என கேட்கிறார்.
இதைதொடர்ந்து யஷிகாவிடம் மும்தாஜ் பேசும் காட்சி காட்டப்படுகிறது. அதில் மும்தாஜ், இந்த வீட்டில் யார் மீது பாசம் வைப்பது என தீர்மானிக்கவே முடியவில்லை என கூறி புலம்புகிறார். மேலும் தன்னுடைய கையில் சாப்பாடு இருக்கிறது என சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசையை காட்டி, சாப்பிட சாப்பாடு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பொய் சொல்ல மாட்டேன் என ஆவேசமாக கூறுகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.