மீண்டும் போரட்டத்தில் குதித்த ஸ்ரீ ரெட்டி...! இப்ப என்ன பிரச்சனை தெரியுமா..? அலறும் தெலுங்கு நடிகர் சங்கம்..!

 
Published : Jun 20, 2018, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மீண்டும் போரட்டத்தில் குதித்த ஸ்ரீ ரெட்டி...! இப்ப என்ன பிரச்சனை தெரியுமா..? அலறும் தெலுங்கு நடிகர் சங்கம்..!

சுருக்கம்

sri reddy again started her protest to get the id

மீண்டும் போரட்டத்தில் குதித்த ஸ்ரீ ரெட்டி...! இப்ப என்ன பிரச்சனை தெரியுமா..?

சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி ஏற்கனவே போராட்டத்தில் குதித்து தெலுங்கு திரை உலகையே ஆட்டி படைத்தார்

இந்நிலையில் மீண்டும் ஒரு போராட்டத்தில் குதித்து உள்ளார் ஸ்ரீ ரெட்டி.அதற்கான  காரணம் என்னவாக இருக்கும் என தோன்றுகிறதா...?

ஆம்... தெலுங்கு பட உலகில் நடிக்க வரும் பெண்களை, படுக்கைக்கு அழைப்பது வாடிக்கையாக வைத்து உள்ளனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவரும் தன்னை படுக்கைக்கு  அழைத்ததாக குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்தார்.

இதற்காக நடிகர் சங்கம் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அதன் பின்னர் தன்னை யாரெல்லாம் படுக்கைக்கு அழைத்தார் என்ற விவரத்தை , அவர்களுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டு ஆதாரத்துடன் தெரிவித்து இருந்தார் ..

அந்த வகையில் அடுத்து வேறு யாருடன்  எடுத்த போட்டோ வெளிவர உள்ளதோ என்ற  ஆவல் கிளம்பும் அளவிற்கு இருந்தது அவரது அதிரடி நடவடிக்கை.

இவர், இது போன்ற குற்றச்சாட்டை முன்வைப்பதால் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க  கூடாத அளவிற்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை வழங்க கூட மறுத்து விட்டது சங்கம்.

மேலும் படத்தில் நடிக்க  தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் இவருக்கு ஆதரவாக  மகளிர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. பின்னர்  ஸ்ரீ ரெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த    தடையை  நீக்கியது நடிகர் சங்கம்.

ஆனால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டையை தராமல் காலம் தாழ்த்தி வருவதால்  மீண்டும் எரிச்சலான ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!