
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் மெல்ல மெல்ல சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளம் போட்டியாளராக களமிறங்கி உள்ள நடிகை யாஷிகாவின் சுயரூபமும் தற்போது தான் வெளியில் வர துவங்கியுள்ளது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் வந்து ஏன் டால்லாக இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு யாஷிகா "நான் உங்களிடம் சொல்கிறேன் நீங்கள் எதையும் சொல்லி காண்பிக்க மாட்டீங்க, ஆன இங்க சொல்லி காண்பிக்க நிறைய பேர் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
மற்றொரு புறம் ஜனனி பேசிகொண்டிருப்பது காண்பிக்கப்படுகிறது, அதில் ரம்யா, வைஷ்ணவி மற்றும் நித்யாவிடம் இவர் பேசிக்கொண்டிருப்பது என்னவென்றால் "ஒரு தலைவியாக யாருக்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறார்.
இவரின் வார்த்தைக்கு பதிலடி கொடுப்பது போல் யாஷிகா 'பெரிய லீடர் என்றால் புரிந்துக்கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யாவிடம் பேசுவது காட்டப்படுகிறது.
பின் ஜனனி பேசுவது காண்பிக்கப்படுகிறது... அவர் இந்த வீட்டில் மிகவும் சிறியவர், அதனால் அதற்கான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என மிகவும் பெருந்தன்மையுடன் கூறுகிறார்.
ஆனால் யாஷிகா இவரை சற்றும் புரிந்து கொள்ளாமல், 'நாம யாரு எவ்வளவு மெச்சூர்டா இருக்கோம் என்பது பொறுமையாக தெரியும் என கூறி சற்றும் மரியாதை கொடுக்காமல் அவளுக்கு போட்டி நான் தான் என்று கூறுகிறார். இது கடவுள் பிளான் என்று கூறி சிரிக்கிறார். இதன் மூலம் யாஷிகாவின் மற்றொரு முகம் தெரிய வந்துள்ளதாக ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.