
நடிகை ஸ்ரீதேவி, இந்த உலகில் இருந்து மறைந்தாலும், ரசிகர்களின் மனதை விட்டு இன்னும் அவர் மறையவில்லை. என்பதற்கு தற்போது சீனாவில் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை செய்த 'மாம்' திரைப்படமே ஒரு சாட்சி.
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு, அவருடைய குடும்பத்தினர் மனதில் மட்டும் இன்றி, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் மெல்ல மெல்ல ஸ்ரீ தேவியின் கணவர் மற்றும் மகள்கள், ஸ்ரீதேவியின் நினைப்பில் இருந்து மீண்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் சீனாவில் வெளியாகியாது. அங்கு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது மட்டும் இன்றி, 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது . இதனால் சீனாவில் உள்ள ரசிகர்கள் .#SrideviScoresCentury என்ற ஹாஷ் டாக் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதற்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனி கபூர் சமூக வலைத்தளத்தில், மிகவும் உருக்கமாக தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.