
எங்க தல தான் கெத்து? டேய் எங்க தளபதிதாண்ட மாஸ்? என்கிற ரசிகர்களால் ஒப்பீடு இருக்கிற வரைக்கும் தல தளபதியின் யாராலும் அசைக்க முடியாது. விஜய் படத்தை அஜித் படத்துடன் ஒப்பிடுவது. அஜித் படத்தை ரஜினி படத்துடன் ஒப்பிடுவது. இப்படி சமூக வலைதளங்களில் நடக்கும் சில தாறுமாறு ட்விட் போரு தினம் தினம் அரங்கேறிவருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்...
சமீபத்தில் வெளியான அஜித் பட டிசர் மிக பெரிய சாதனையை படைத்துள்ளது என்றால் சொன்னால் மிகையாகது கிட்டத்தட்ட எல்லா சாதனையும் உடைத்தது என்றாலும் மிகையாகது பாகுபலி 2 சாதனையை தவிர என்று சொல்லலாம். சாதனையுளும் ஒரு சோதனை இருக்க தான் செய்கிறது. இதனால் அஜித் ரசிககர்கள் கொஞ்சம் மனம் உடைந்து தான் உள்ளனர்.
இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்தில் அதை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் மேட்டர். இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் 61 லட்சம் பேர் பார்த்தார்களாம். தற்போது பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி பார்வையாளர்களை தொடவுள்ளது.
இதற்க்கு முன் வெளியான ரஜினியின் கபாலி, விஜயின் தெறி, பைரவா மட்டுமின்றி தென்னிந்தியாவில் பாகுபலி-2வை தவிர மற்ற அனைத்து டீசர் சாதனைகளையும் தகர்த்துள்ளது. இதுவரை 325k பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளது.
அது மட்டுமல்ல, தல அஜித் ரசிகர்கள் சந்தோஷமாக உள்ள நேரத்தில் ஒரு சோதனையிலும் சாதனை படைத்துள்ளது, ஆம், இரண்டே நாட்களில் 57k டிஸ்லைக் வந்ததும் விவேகம் டீசருக்கு தான். இது அஜித் ரசிகர்களிடையே கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இப்படி டிஸ்லைக் செய்வது? அது விஜய் ரசிகர்கள் தான் என்பது அவர்களுக்கு தெரிந்த ஒன்றுதான், ஏற்கனவே வெளியான பைரவா பட ட்ரைலர் வந்தபோது அஜித் ரசிகர்கள் டிஸ்லைக் செய்ததற்கு தான் பழிக்கு பழி வாங்கியுள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.