
பிக்பாஸ் நிகழ்ச்சி, ஜூன் மாதம் 23 தேதி, விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்டமாக துவங்கப்பட்டது. முதல் சீசன் அளவிற்கு, மூன்றாவது சீசனில் விறுவிறுப்பு இல்லை என்றாலும். இரண்டாவது சீசனை விட பரபரப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி துவங்கி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், தற்போது வரை, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சாக்ஷி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதே போல் பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு சுற்று மூலம் நடிகை கஸ்தூரி உள்ளே நுழைந்துள்ளார்.
இவரை தொடர்ந்து, யார் பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்த சீசனில் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்ட வனிதா ஸ்பெஷல் கெஸ்ட்டாக மீண்டும் உள்ளே நுழைந்துள்ளார். இவர் உள்ளே அடியெடுத்து வைத்த நாளில் இருந்து, பிரச்சனைகளும் பிக்பாஸ் வீட்டில் கலை கட்டி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா போட்டியாளராக இருந்த போது இவருடைய சம்பளம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரமாக இருந்த நிலையில். இப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள 1 .50 லட்சம் ஒரு நாளைக்கு சம்பளமாக இவருக்கு கொடுக்கப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் உள்ளே போட்டியாளராக இல்லா விட்டாலும் இவரின் கதவை அதிஷ்டம் தானா தேடி வந்திருக்கிறது பாஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.