
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், சிகிச்சை பலனின்றி சென்ற வாரம் வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்ற வந்த மருத்துவமனை குறித்தும், மருத்துவமனை பில் தொகை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி. சரண், நாங்கல் ஒரு தொகை கட்டியதாகவும், மீதம் செலுத்த வேண்டிய தொகைக்காக தமிழக அரசை நாங்கள் அணுகியதாகவும், ஆனால் அவர்கள் உதவி செய்யாததால், குடியரசு துணை தலைவரை நான் அணுகியதாகவும், அவர் உடனே உதவினார் என்றும் வதந்தி பரவி இருக்கிறது. பணத்தை முழுமையாக செலுத்தினால் மட்டுமே அப்பாவின் உடலை அவர்கள் தருவார்கள் என்றும் சொன்னதாக செய்தி பரவி உள்ளது.
இதையும் படிங்க: தோள்களை விட்டு நழுவும் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில்... கவர்ச்சி நங்கூரமிட்ட யாஷிகா..! மெர்சலான இளசுகள்..!
இது தங்களது குடும்பத்தினருக்கு மிகவும் வருத்தத்தை கொடுப்பதாகவும், எப்படி இப்படிப்பட்ட வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் எஸ்.பி.பி.சரண் வேதனை தெரிவித்திருந்தார். மேலும் தானும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து பிரஸ் மீட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து, அதில் அப்பாவின் மருத்துவ செலவு குறித்த தகவல்களை வெளியிட உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை 2.30 மணிக்கு எஸ்.பி.பி. சரணும், மருத்துவமனை நிர்வாகமும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான செலவுகள் குறித்த தகவல்களை வெளியிட உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.