சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் எஸ்.பி.பி-யை கெளரவிக்க திட்டம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 15, 2021, 7:05 PM IST
Highlights

அதேபோல் இந்த முறை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கெளரவிக்க உள்ளனர் என்ற செய்தி எஸ்.பி.பி.யின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி தொடங்கி 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன. ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்’ நடத்தும் இந்த திரைப்பட விழாவை இம்முறை பிவிஆர் இணைந்து வழங்குகிறது. ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும், கேன்ஸ், ரோட்டர்டாம் போன்ற சர்வதேச படவிழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்பட்டுகின்றன. ஈரானில் இருந்து 11 திரைப்படங்களும், பிரான்சில் இருந்து 6 படங்களும், ஹங்கேரியில் இருந்து 4 படங்களும் இடம்பெறும். ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அங்கோலா, எத்தியோப்பியா, கிர்கிஸ்தான், லெபனான், ருவாண்டா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த படங்கள் முதல் முறையாக பங்கேற்கின்றன.

தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் ‘லேபர்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’ , ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதர்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்க உள்ளதாக இந்தோ சினி அப்ரிசியேஷன்ஸ்          பவுண்டேஷன் பொதுச்செயலாளரும், விழாக்குழு இயக்குநருமான தங்கராஜ் தெரிவித்திருந்தார். 

தற்போதைய தகவலின் படி, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் விழாவை நடத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இந்த முறை சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை கெளரவிக்க உள்ளனர் என்ற செய்தி எஸ்.பி.பி.யின் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

click me!