விவாகரத்தை தொடர்ந்து  சௌந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் செய்துக்கொண்ட  இரண்டாவது திருமணம்...!  

 
Published : Mar 09, 2018, 09:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
விவாகரத்தை தொடர்ந்து  சௌந்தர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் செய்துக்கொண்ட  இரண்டாவது திருமணம்...!  

சுருக்கம்

sowndharya rajinikanth ex husband ashwin second marriage

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த வருடம் கணவர் அஷ்வினிடம்  இருந்து விவாகரத்துப்  பெற்று பிரிந்தார். அஷ்வின்  சௌந்தர்யாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

விவாகரத்து:

சௌந்தர்யா குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய கணவர் வீட்டிற்கு செல்லாமல் அம்மா வீட்டிலேயே இருந்தார். இதனால் ஒரு சில பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் சௌந்தர்யாவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக செய்திகள் வெளியிட்டது.

 

உறுதி செய்த சௌந்தர்யா:

முதலில் இந்த செய்தியை மறுத்து வந்த சௌந்தர்யா பின் கணவரை விவாகரத்து செய்யப்போவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். 

உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் எடுத்தும் அது முடியாமல் போகவே இறுதியில் இவர்கள் இருவரும் கடந்த வருடம் விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். 

அஸ்வின் திருமணம்:

இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் அஷ்வின்  தற்போது இரண்டாவதாக ஒரு பெண்ணை அண்மையில் திருமணம் செய்துள்ளார். இவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் தற்போது இவர் திருமணம் செய்துக்கொண்ட பெண் யார் என்கிற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அந்த புகைப்படம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?