தண்ணீர் பிரச்னையை எடுத்துக்கூறிய 'கேணி' பட இயக்குனருக்கு விருது...!

 
Published : Mar 09, 2018, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
தண்ணீர் பிரச்னையை எடுத்துக்கூறிய 'கேணி' பட இயக்குனருக்கு விருது...!

சுருக்கம்

keni movie director got kerala state award

தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் "கேணி".

பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்? என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம் ஏ நிஷாத். 

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர். 

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த போதிலும், தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இப்படத்தில் நிறைந்திருந்ததால் கேரளத்தில் சில இடங்களில் எதிர்ப்பு நிலவியது. 

எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்திற்கு, கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்-திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான நீதியை தனது திரைப்படத்தின் வாயிலாக பேசிய ஒரு இயக்குநருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?