சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான புதிய தகவல்!

Published : Nov 13, 2018, 12:12 PM IST
சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் குறித்து வெளியான புதிய தகவல்!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா... தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். மேலும்  இவருடைய திருமணம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா... தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். மேலும்  இவருடைய திருமணம் குறித்து புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

சௌந்தர்யா கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி இயக்குனராகவும் , தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர்.  கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேத் என்கிற மகனும் உள்ளார்.

குழந்தை பிறந்ததற்கு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் அஸ்வினிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில் சௌந்தர்யா பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன், விசாகனை காதலித்து வந்ததாகவும்... இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இவர்களுடைய காதல் திருமணத்தில் முடிய உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து.. இவர்களுடைய திருமணம் வரும் ஜனவரி மாதல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.  விசாகன், வெளிநாட்டில், எம்.பி.ஏ., படிப்பை முடித்து, சென்னையில், மிகப் பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!