
கோச்சடையான் படத்தின் தோல்விக்கு பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய "வேலை இல்லா பட்டதாரி 2 " திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரமம் பள்ளிக்கு தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால், எழுத்து மூடப்பட்டது. இதனை ஒரு சிலர் "வாடகைக்கு பணம் கொடுக்காததால்" பள்ளி எழுத்து மூடப்பட்டதாக தகவல் பரப்பினர்.
இந்த செய்தியை அறிந்து, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இந்த தகவல் வதந்தி என கூறப்பட்டாலும். பலர் தொடர்ந்து இதுகுறித்து விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த், வாடகை பணம் கொடுக்காததால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பள்ளி எழுத்து மூடப்பட்டது என்று அவதூறு கருத்துக்களை பரப்பியவர்கள் மீது 5 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.