
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய 100 நாள் விளையாட்டில் கலந்து கொண்டு, தரை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதன் மூலமும், மிகவும் அதிகமாக கோபப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை கெடுத்துக்கொண்டவர் நடன இயக்குனர் காயத்ரி.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை சிலர் மன்னிக்க தயாராகா இருந்தாலும் பலர் அவரை மன்னிக்க தயாராக இல்லை. காரணம் இவர் இந்த விளையாட்டை விளையாட்டாக பார்க்காத போது நாங்கள் ஏன் இவரை ஒரு போட்டியாளராக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிற கேள்விதான்.
இவர் வெளியேறியதும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து பார்த்த பலர் காத்ரியிடம் பல கேள்விகள் எழுப்பினர். காயத்ரி அனைவர் எழுப்பிய கேள்விகளில் இருந்து அவர்களில் பலர் ஓவியாவிற்கு மட்டும் தான் சப்போர்ட் செய்கின்றனர் என்பதை புரிந்துக்கொண்டார்.
ஒரு நிலையில், கமலஹாசனிடம் பேசிய காயத்ரி தனக்கு இந்த கேம், நேற்றைய தினம் தான் புரிந்ததாக சொல்லுகிறார். மேலும் தங்களுடைய டாஸ்க்கை சரியாக செய்தால் போதும் என்கிற எண்ணம் மட்டுமே தனக்கு இருந்ததாக கூறினார்.
இவரின் இந்த பதிலும் பலர் இணையதளங்களில், தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். காரணம் விதிமுறையை 100 நாட்கள் இந்த வீட்டிற்கும் நீங்கள் இருக்க வேண்டும் 30 கேமராக்கள் உங்களை எப்போதும் கண்காணிக்கும் என்பது தான்.
ஆனால் காயத்ரி இந்த அனைத்து விதிமுறைகள் பற்றி தெரிந்து ஏன் வெளியேறும்போதும் பொய் சொல்லுகிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு காயத்ரி தான் பதில் சொல்ல வேண்டும் அதுவரை பொறுத்திருந்து பாப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.