சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு - 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு

Asianet News Tamil  
Published : Dec 23, 2016, 02:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு - 6 மாதத்துக்கு ஒத்திவைப்பு

சுருக்கம்

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, அவரது கணவர் தொழிலதிபர்  அஸ்வின்  இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கு 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். 

சௌந்தர்யா இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது. இதற்கிடையே, அஸ்வின்- சௌந்தர்யா தம்பதியிடையே சின்ன சண்டை தான் என்றும் அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர். இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்று நம்பப்பட்டது. 

ஆனால் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர்.  கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு அண்மையில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு ‘என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். 

சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்த செய்திகளை இரு தரப்பும் மறுத்து வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் பகீரங்கமாக தனது நிலையை அறிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பரஸ்பரம் பிரிவது என முடிவெடுத்த நிலையில் வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி மேரி டில்டா முன்பு விசாரணைக்கு வந்தது. 

இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி தாங்கள் பிரிவதாக கூறினர். பரஸ்பரம் தாங்கள் விவாகரத்து பெற விரும்புவதாக தெரிவித்தனர். இளம் தம்பதிகள் என்பதால் 6 மாதம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். 

6 மாதத்தில் தம்பதிகள் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம், இல்லாவிட்டால் விவாகரத்து அளிக்கப்படும். குழந்தை யாரிடம் இருப்பது பராமரிப்பு குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணியின் கழுத்தை நெரித்த மனோஜ்.... பூதாகரமாக வெடித்த சொத்து பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அனிருத்துக்கு 'MDS' எனப் பெயர் வைத்த தளபதி விஜய்! அப்படின்னா என்னன்னு தெரியுமா? வைரலாகும் பின்னணி!