ரஜினி மகளுக்கு கிடைத்தது விவாகரத்து...

 
Published : Jul 04, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
ரஜினி மகளுக்கு கிடைத்தது விவாகரத்து...

சுருக்கம்

Soundarya Ashwin Ramkumar formally separate after Chennai family court grants divorce

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஷ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை  குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர்  அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு  பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம்  நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 

சுமார் 6 வருட வாழ்க்கைக்குப்பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், நடிகை ராதிகா, தனது மகளின் திருமண வரவேற்பு விழாவில், நடந்த  இரவு விருந்தில் கலந்து கொண்ட  சௌந்தர்யா  ஏதோ சில பிரச்சனையால் விவாகரத்து செய்வதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது.  அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.

ஆனால் இந்த பிரச்சினை தீரவில்லை.  பிரசவத்திக்கு என ரஜினி வீட்டுக்கு வந்த சௌந்தர்யா அங்கோயே தங்கி வீட்டார். இதில் மேலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து கொண்டு இருந்தாது.  

கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போதும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகின்றது.

திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு 'என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.
சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்த செய்திகளை இரு தரப்பும் மறுத்து வந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் பகீரங்கமாக தனது நிலையை அறிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரிடமும் பெற்றோர்கள் மற்றும் நல விரும்பிகள் சமரசம் செய்ய முயற்சி செய்து வந்தனர். ஆனால் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர்.

இதனை அடுத்து பரஸ்பரம் 

பிரிவது என முடிவெடுத்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் விவாகரத்து வேண்டி சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு கடந்த 26 ஆம் தேதி சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மேரி
கிளட்டா முன்பு ஆஜராகி பிரிந்து வாழ்வது என்ற முடிவில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர்.

இதனை அடுத்து இன்று உத்தரவிட்ட நீதிபதி  இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற திருமணம் அதற்கு பின்னர் நடைபெற்ற பதிவை ரத்து செய்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!