மனைவி புகார்... போலீஸ் வழக்கு பதிவு – தாடி பாலாஜி தலைமறைவு…!!

 
Published : Jul 04, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
மனைவி புகார்... போலீஸ் வழக்கு பதிவு – தாடி பாலாஜி தலைமறைவு…!!

சுருக்கம்

4 cases filed on balaji

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியின் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, பாலாஜியின் மீது 4 பிரிவுகளின் கீழ் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராகவும், திரைப்படங்களிலும் நடித்து வருபவர் தாடி பாலாஜி.

இவரது மனைவி நித்யா. இவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது.

கடந்த சில நாட்களாக பாலாஜி-நந்தினி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி, தாடி பாலாஜியின் மனைவி நந்தினி, சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரை போலீசார் கண்டுகொள்ளாததால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிதார்.  

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நித்யா, கணவர் பாலாஜி மீது மாதவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 45 நாட்களுக்குமேல் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக அவர் கூறினார்.

இதைதொடர்ந்து, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாதவரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பாலாஜியின் மீது பிரிவு 294 பி (அவதூறாக பேசுவது) 324 (அவதூறாக பேசி தாக்குவது) 506(2)(கொலை மிரட்டல்), பெண் வன்கொடுமை சட்டம் பிரிவு 4 of woman harressment act r/w.3(1)(10), சாதியை சொல்லி கேவலமாக திட்டுவது வன்கொடுமை சட்டப்பிரிவு 3(1)(11) sc st act. ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் தன்னை கைது செய்து விடாமல் இருப்பதற்காக தாடி பாலாஜி தலைமறைவாகி விட்டார்.அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர் 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!