
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும், சீரியல் பணிகளுக்கும் மட்டுமே அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், சூரரை போற்று படம் குறித்து தற்போது சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
மேலும் செய்திகள்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்ந்த... பிரமாண்ட வீடு.. வாங்க பார்க்கலாம்!
அரசு தரப்பில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி அளித்ததால், சூரரை போற்று படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவதை பொறுத்தே திரையரங்கங்கள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 8 வயதில் கிரிக்கெட் வீரரால் மாதவன் சந்தித்த அவமானம்..! மோசமான அனுபவத்தால் வந்த பழக்கம்! போட்டுடைத்த நடிகர்!
இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட கோரி ரூபாய் 55 கோடி வரை கேட்டும், சூர்யா தன்னுடைய ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என கூறி கறாராக மறுத்து விட்டாராம். காரணம் இந்த படத்தின் கதை மீது அவர் வைத்துக்கும் நம்பிக்கை என்றே கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: மது அருந்தியபடி... உச்ச கவர்ச்சியில் தொடையை தாராளமாக காட்டி மிரட்டல் போஸ் கொடுத்த அமலாபால்!
தற்போது படத்தை பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து இந்த படம் குறித்த அப்டேட் கேட்டு வந்த நிலையில், சூப்பர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதாவது இந்த படத்தில் இருந்து கட்டுப்பயலே என்கிற பாடலின் ஒரு நிமிட வீடியோ ஜூலை 23 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் செம்ம குஷியாக இந்த தகவலை வைரல் ஆக்க துவங்கி விட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.