ஆஸ்கர் போட்டியில் நீடிக்கும் 'சூரரை போற்று'! உற்சாகத்தில் ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Feb 26, 2021, 1:13 PM IST
Highlights

பொதுப்பிரிவில் தரமான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். அந்தப் பிரிவில் தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தேர்வானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு  ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் கவர்ந்தார் சூர்யா. இவரது நடிப்பிற்கு கண்டிப்பாக தேசிய விருது மற்றும் ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம் என  சூர்யா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஓடிடி தளத்தில் வெளியாகாமல், திரையரங்கில் ஒருவேளை 'சூரரை போற்று' திரைப்படம் வெளியாகி இருந்தால், உலக அளவில் வசூலிலும் சாதனை படைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தார் இந்த படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி. ஜி.வி.பிரகாஷின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் சமீபத்தில் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான திரையிடலுக்கு தேர்வானது. கொரோனா காரணமாக, ஆன்லைன் ஸ்கிரீன் ரூமில் நடைபெறவுள்ள இந்த திரையிடலை உலகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிடுவார்கள். அதற்காக பொதுப்பிரிவில் தரமான 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். அந்தப் பிரிவில் தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தேர்வானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் பட பட்டியலில், மொத்தம் 366 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது 'சூரரைப் போற்று'. சிறந்த நடிகருக்கான சூர்யாவிற்கு, வாக்களிக்க வருகிற 5 ஆம் தேதிலியிருந்து 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

news: 366 feature films in contention for Best Picture https://t.co/Op3816kIYh

— The Academy (@TheAcademy)

 

click me!