இன்று வெளியாகியுள்ள மறைந்த நடிகை சித்ராவின் 'கால்ஸ்' படத்திற்கு இலவச டிக்கெட்..!

Published : Feb 26, 2021, 12:27 PM IST
இன்று வெளியாகியுள்ள மறைந்த நடிகை சித்ராவின் 'கால்ஸ்' படத்திற்கு இலவச டிக்கெட்..!

சுருக்கம்

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முதல் மற்றும் கடைசி திரைப்படமான 'கால்ஸ்' பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று, பிப்ரவரி 26 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது.

மறைந்த நடிகை வி.ஜே.சித்ராவின் முதல் மற்றும் கடைசி திரைப்படமான 'கால்ஸ்' பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று, பிப்ரவரி 26 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் துவங்கி கடைசியாக வெளிவந்த காலங்கள் பாடல் வரை, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்திற்கும் அதே அளவிற்கான ஆதரவு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ராவின், கனவு படமான 'கால்ஸ்'... திரைக்கு வருவதற்கு முன்பே, இந்த உலகை விட்டு அவர் சென்று விட்டாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரது நினைவில் இருந்து வெளியே வரவில்லை. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய முல்லை பூத்திருந்தாலும், பழைய முல்லை போல் வருமா, என பல ரசிகர்கள் ஏக்கத்தோடு தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கால்ஸ்' படத்திற்கு இலவச டிக்கெட்டுகளை அறிவித்துள்ளனர் படக்குழுவினர். குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும் விதமாக, சென்னையில் உள்ள திரை அரங்குகளில் இந்த படத்தை காண வரும் பெண்களுக்கு இலவச அனுமதி என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அடுத்து பெண்கள் இந்த படத்தை இலவசமாக காணும் வாய்ப்பை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பெண்களே... 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?