விமான பயணத்தில் இந்தி நடிகைக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி... சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ...!

Published : Nov 05, 2019, 01:47 PM IST
விமான பயணத்தில் இந்தி நடிகைக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி... சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ...!

சுருக்கம்

வெளிநாட்டு படப்பிடிப்புகளில் பங்கேற்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது எல்லாம் திரைப்பிரபலங்களுக்கு வாடிக்கையான நடவடிக்கை. ஆனால் விமானப் பயணத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு கிடைத்த எதிர்பாராத அனுபவமோ அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது வருத்தத்தை பகிரும் விதமாக சோசியல் மீடியாவில் சோனாக்‌ஷி சின்ஹா வெளியிட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது. 

விமான பயணத்தில் இந்தி நடிகைக்கு கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி... சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோ...!

இந்தியில் முன்னணி நடிகையான சோனாக்‌ஷி சின்ஹா தனது சூட்கேசை உடைத்த இண்டிகோ நிறுவனத்தை மிகவும் நாகரிகமான முறையில் விமர்சித்து வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. தமிழில் லிங்கா படத்தில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா, பாலிவுட்டின் முன்னணி  நடிகையான இவர் பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். வெளிநாட்டு படப்பிடிப்புகளில் பங்கேற்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது எல்லாம் திரைப்பிரபலங்களுக்கு வாடிக்கையான நடவடிக்கை. ஆனால் விமானப் பயணத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவிற்கு கிடைத்த எதிர்பாராத அனுபவமோ அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது வருத்தத்தை பகிரும் விதமாக சோசியல் மீடியாவில் சோனாக்‌ஷி சின்ஹா வெளியிட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் விமானத்தில் பயணம் செய்த சோனாக்‌ஷி சின்ஹாவின் சூட்கேஸை, இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் உடைத்துவிட்டதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உடைக்க  முடியாததைக் கூட ஈஸியா உடைச்சிட்டீங்க என்று தனது மன வருத்தத்தை நாசூக்காக வெளிக்காட்டியுள்ளார். மேலும் "இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தேன், நல்ல இருந்த என் சூட்கேஸை இப்படி பண்ணிட்டாங்க. முதல் கைப்பிடியும், இரண்டாவது கைப்பிடியும் உடைந்துள்ளது. சூட்கேஸ் சக்கரத்தையும் காணவில்லை. நன்றி இண்டிகோ ஊழியர்களே" என குறிப்பிட்டுள்ளார். 

சோனாக்ஹி சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புலம்பல் வீடியோ சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. சோனாக்‌ஷியின் நிலையை கண்டு கடுப்பான ரசிகர்கள் இண்டிகோ நிறுவனத்தை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். "இப்போ ஒரு 500 ரூபாய் கூப்பன் கொடுத்து சாரி கேட்பாங்க பாருங்க", "விமான நிலையத்திலேயே புகார் சொல்லி இருக்கனும், வெளிய வந்ததுக்கு அப்புறம் கண்டுங்க மாட்டாங்க" என்றெல்லாம் இண்டிகோ நிறுவனத்தை வறுத்தெடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இண்டிகோ நிறுவனம் சோனாக்‌ஷி சின்ஹாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. தனது முழு வருத்தத்தை தெரிவித்துள்ள இண்டிகோ, சூட்கேஸை கையாண்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என உறுதி அளித்துள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயை பாஜகவிடம் மாட்டிவிட்ட ஆதவ்..! தவெகவில் வெடித்த பிரளயம்.. வீணாய்ப்போன அரசியல் எதிர்காலம்
Actor Vidyut Jammwal : உடம்புல பிட்டு துணி கூட இல்லாம விஜய், அஜித் பட வில்லன் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!