'மீடூ' - ல் பெண்கள் இதை செய்தால்... 100 சதவீதம் தண்டனை கொடுக்க வேண்டும்! அதிரடியாக காட்டும் நடிகை!

By manimegalai aFirst Published Nov 3, 2018, 3:15 PM IST
Highlights

மீ டூ விவகாரம் நாட்டையே உலைக்கு வருகிறது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்து உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் நானா படேகர் மீது தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்த தானுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். 

மீ டூ விவகாரம் நாட்டையே உலைக்கு வருகிறது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்து உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் நானா படேகர் மீது தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்த தானுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க மறுத்து அக்ஷய்குமார், அமீர்கான் ஆகியோர் விலகி உள்ளனர்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா மீ டூ குறித்து அளித்த பேட்டியில் கூறியுள்ளது...

"பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்தால் அதை தட்டி கேட்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தவறு செய்கிற ஆண்களுக்கு 100 சதவீதம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தவறாக நடப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன்.

அதே மாதிரி பெண்களால் எந்த ஆண்ணாவது பாதிக்கப்பட்டால் அந்த பெண்களுக்கு 100  சதவீதம் தண்டனை கொடுக்க வேண்டும். நீதி கிடைப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கூடாது. நியாயம் இரு சாரருக்கும் பொதுவாக வேண்டும். யார் மீது குற்றம் சாட்டு வந்தாலும் அதில் உண்மையை தெரிந்து கொண்ட பிறகுதான் மற்றவர்கள் அது பற்றி வெளியே பேச வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். 

click me!