
சமீபத்தில் நடந்து முடிந்த, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி... இறுதி வரை சென்ற ரம்யா - சோம் சேகர் இருவரும் மாலையும் கழுத்துமாக வெளியான புகைப்படம் குறித்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா ஒரு சிலரை மட்டுமே நண்பர்களாக ஏற்று கொண்டதில் சோம் சேகரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இறுதி நாள் வரை வைத்திருந்த ஒற்றை சாக்லேட்டை கடைசியில் அவர் எவிக்ட் ஆகும்போது ரம்யாவிடம் கொடுத்துவிட்டு சென்றார் என்பதும் தெரிந்ததே.
இந்த சாக்லேட் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும் ரம்யாவும் கூறியிருந்தார். மேலும் இவர்களுக்கு இடையே, நட்பையும் தாண்டிய அன்பு இருப்பதாக சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட, இதன் பிரதிபலிப்பாக, ரம்யாவின் சகோதரரிடம் நெட்டிசன் ஒருவர், சோம் மற்றும் ரம்யா திருமணம் செய்து கொள்வார்களா என கேட்க, இதற்க்கு பதிலளித்த அவர், சோம் மிகவும் நல்லவர், அதே நேரத்தில் இது அவர்கள் விருப்பம் என கூறி இருந்தார்.
இதை தொடர்ந்து, திடீர் என சோம் - ரம்யா இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் பரவியது. இததால் இவர்களுக்கு திருமணம் என்கிற வதந்தியும் கிளம்பியது. ஆனால் உண்மையில், இது சோம் - ரம்யா ஆகியோரை வைத்து யாரோ ஒருவர் செய்த போட்டோ ஷாப் புகைப்படம் என தற்போது தெரியவந்துள்ளது.
அதே போல், தாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே... என்றும் இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சோம் - ரம்யா கேட்டு கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.