நான் தியேட்டருக்கு போயி “காலா” பார்க்கல... இது என் விமர்சனம் இல்ல, நான் எப்பவுமே தமிழ் ராக்கார்ஸ் தான். நெட்டிசன் கலகல!

First Published Jun 7, 2018, 2:39 PM IST
Highlights
social media users Kaala Movie Review


நான் தியேட்டருக்கு போயி “காலா” பார்க்கல... இது என் விமர்சனம் இல்ல, நான் எப்பவுமே தமிழ் ராக்கார்ஸ் தான். ஒரு நண்பரின் பதிவு இது... என முகநூளில் ஒரு விமர்சனம் நம் கண்ணில் பட்டது அதை அப்படியே சுட்டு உங்களுக்கு காட்டுகிறோம்.

வாங்க பார்க்கலாம்... தாராவி தா'தா' என்று பெயர் வைத்து இருக்கலாம் .. கதை மும்பை பகுதி மிகப்பெரிய குடிசை பகுதியில் கட்டிடம் கட்ட நினைக்கும் நானாபடேகர்க்கும் ரஜினிக்கும் நடக்கும் தனி மனித சண்டை...

ரஜனிகாந்த் .. மிக தெளிவாக தனது நடிப்பு பகுதியை தேர்ந்தெடுத்து இருக்கிறார் ..

வயதுக்கு தகுந்த மனைவியுடன் ஊடல் காட்சிகள் மட்டுமே காதல் காட்சிகள் இல்லை ..

முன்னால் காதலியை பார்க்கும் பொது.... படபடபான உடல் வெளிப்பாடுகள் ..

நடன காட்சிகளில் தனக்கு வரும் அசைவுகள் ... சண்டைகாட்சிகளில் முகத்தில் காட்டும் கடுமை .. போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கி விட்டு அதெல்லாம் என்னைய தொட்டுவிடுவான்களா என்ன என்று மனைவியிடம் சொல்லும் காட்சியில் .. உங்க அவ வந்து இருந்தா ..

என்று முன்னால் காதலி ரஜினி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பொது கும்பலில் வந்து நின்றால் என்று சொல்லும் கட்டத்தில் .. நெசமாவா வந்திருந்தாளா என்ன என்று கண் விரிய கேட்கும் காட்சி .. ரஜினி ஒரு பரிதாப innocent காதலனாக இதுவரை நடிக்காத காட்சி ...

ஈஸ்வரி ராவ் ரஜனியின் அப்பாவி மனைவி நிறைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், அவருக்கு டப்பிங் பேசியவர் திருநெல்வேலி தமிழ் பேசி ,,, என் மகள் ஸ்ரீநிதி க்கு பாதி வசனம் புரியவில்லை ,

ரஜினியின் முன்னால் காதலி ஹுமா குரேஷி.. மிக மிக அருமையான பாந்தமான நடிப்பு.. முன்னால் காதலனை நேர்மையாக கையாளும் அழகு... உனது எண்ணத்தில் இருந்த சரீனா வேறு நான் இப்போது வேறு என்பதை உடல் முக நடிப்பால் உணர்த்தும் நேர்த்தி ..இந்த பாத்திர அமைப்பிற்காக ரஞ்சித்தை பாராட்டலாம் ..

படம் முழுவதும் திரையில் தனது நடிப்பால் நிறைந்து இருப்பவர் "சமுத்தரக்கனி "

ராப் பாடல்கள் எனக்கு பிடித்து இருந்தது "உன்னையும் மண்ணையும் வென்று வா நீ " அப்படீன்னு பாடிகிட்டே வீட்டுக்கு வந்தேன் .. BGM மிரட்டலாக இருந்தது.

காமெரா ... முரளி .. மிக திறமையாக சிறிய குறுகலான இடங்களில் எடுக்கவேண்டிய எல்லா காட்சிகளிலும் திறம்பட எடுத்து இருக்கிறார் .. டிரோன் எனப்படும் ஆகாச காமெரா காட்சிகள் நிறைய பயன்படுத்தப்பட்ட தமிழ் படம் இதுவாகத்தான் இருக்கும் .

பா.ரஞ்சித் ...

திரைக்கதை ...

இது வர்க்க போராட்ட கதையா .. கம்முனிச சித்தாந்த நிலம் ஏழைக்களுக்கு என்பதாக சொல்லி இருக்கிறாரா??

தாழ்த்தப்பட்ட மக்களை பற்றிய படமா என்றால் ..

காலாவின் தந்தை வேங்கை என்பவரை காலா (ரஜினி) சரீனா (ஹுமா) திருமணத்தின் போது ஹரிநாத் ( நானா படேகர்) கொன்றதற்கு... பழி வாங்கியுவுடன்... படம் முடிந்து விடுகிறது.,, ஆம் ,,

படத்தில் தாராவியில் கட்டடம் கட்டி மக்களின் நிலத்தை சுரண்டுகிரவரனை கொன்று,, ரஜினி கதாபாத்திரம் இந்த மக்கள் நில உரிமை பற்றி எந்த ஒரு முடிவோ நிலைபாடோ சொல்லாமல் படத்தை ரஞ்சித் முடித்து இருக்கிறார் ..

suggestive imposing... பின்புலத்தில் காணும் விசயங்களை வைத்து தனது தலித்தியல் மற்றும் அம்பேத்கார் புத்தர் சார்பு நிலை பற்றிய விசயங்களை காட்டி இருக்கிறார் வில்லன் ராம பக்தன், அவன் பூஜையில் இருக்கும் பொது பின் புலத்தில் ராமாயண கதை வடமொழியில் சொல்லி... ரஜினியை ராவணன் என்பதாக காட்டி அவன் உயிர் பெற்று வருவதாக... நிலத்தை ஆளும் உரிமை இல்லை என்றால் எங்களுக்கு உங்கள் கடவுள்கள் தேவை இல்லை. போன்ற வசனங்கள் ரஜினி வாயில்...

நிறைய உரத்த குரல் வசனங்கள் ,,, போராட்ட உலகை பெருமைபடுத்தும் காட்சிகள், போராட்ட கும்பலில் துரோகங்கள் .. இதை தினமும் டிவியில் பார்த்து பார்த்து... முடிச்ச பிறகு இந்த படம் வந்து இருக்கு...

ரஜினியிசம் நெஞ்சில் குண்டு பதிந்து நெருப்பில் வெடித்து சிதறி திரும்ப வந்து கலர் பொடிகள் மத்தியில மோளம் தட்டி .. கும்பலில் வில்லன் செத்தாதாக சப்புன்னு கதை முடிகிறது ..

ரஜினியின் படமாக சென்று பார்க்கலாம்!
இது என் கருத்து

நாயகன் படத்தில் ரஜினி நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான்.
ரஞ்சித் சிவசேனையினை பிஜேபியினை வச்சு செஞ்சுட்டார்: “ரஞ்சித்” பாசறைகள் உற்சாகம்

இததானடா நாங்களும் சொன்னோம், அவன் மும்பை தமிழர் கதையில் மராட்டியரை வம்புக்கு இழுப்பான். அது ரஜினிக்கு ஆபத்து
சிவசேனையினை மிக சீண்டியிருக்கின்றாரா?

இதோ இழுத்துட்டான்ல, இனி பாருங்க ரஜினிக்கு வரும் சோதனை எப்படின்னு....

இனி சிவசேனா ரஜினியினை வச்சி செய்யும் பாருங்க...

ரஞ்சித்தின் காலா வெற்றியாம்... ரஜினியின் காலா தோல்வியாம்...

எப்படியோ சங்கிகளுக்கு தேள் கொட்டியது போல இருந்தா சரி...
ரஜினியை வைத்ததே ரஜினிக்கு (மக்கள் போராட்ட எதிர்ப்பு நிலைக்கு)  தலையில் குட்டு வைத்திருக்கும் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள்.

காலா படத்தில் நம்மை தான் கழுவி ஊற்றி இருக்குறாங்க அப்டினு தெரியாம காலாவை ஆதரித்து
பேசின பா.ஜ.க நிலைமை தான் ரொம்ப மோசம்! இவ்வாறு அதில் தாறுமாறாக ரஜினியை கலைத்திருக்கிறார்கள்.

click me!