
காலா படத்தின் பெரிய மைனசே "செல்வியை" கொன்னது தான்....
பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில்,காலா திரைப்படம் இன்று வெளியானது.
இதில் ரஜினி எந்த அளவுக்கு மாஸ் காண்பித்து இருப்பாங்க என்ற எதிர்பார்ப்போடு கிளம்பிய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் இருக்காது...
ஆனால் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரிராவ், மொத்த மார்க்கையும் வாங்குகிறார். நடிப்பிலும் சரி...டைலாக்லயும் சரி...
மும்பையில் தாராவி ஸ்லம் எரியாவில் கூட்டாக வசித்து வரும் ஒரு பட்டாம் பூச்சி கூட்டையே அழிக்க வராங்க பெரிய தாதா...
எத்தனை முறை சீண்டினாலும், ஒரு கை மண் அளவு கூட அங்கிருந்து எடுக்க முடியவில்லை....அதாவது அந்த இடத்தில் பெரிய பிராஜக்ட் கொண்டு வர ப்ளான்.
போலீசார் டார்ச்சர், அரசியல் டார்ச்சர் தாதா டார்ச்சர் என தொடர் டார்ச்சர் வந்தாலும் மக்கள் கூட்டாக இருந்து காலா வழியிலேயே செல்கின்றனர்.
இதற்கிடையில், ஹரிதாஸ் தாதா ஏவுதலின் பேரில் ரஜினி மற்றும் ஈஸ்வரி ராவ் வாகனத்தில் செல்லும் போது விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
அதில் காலாவின் மனைவியாக நடிக்கும் செல்வி (ஈஸ்வரி ராவ் ) இறந்து விடுகிறார்....
இவர் இறந்த பின், படத்திற்கே உயிரோட்டம் இல்லை என்று கூறலாம்....
இதற்கு அடுத்த படியாக, கடைசி வரை அந்த தாதா வால் தாராவியில் இருந்து கை மண் அளவு கூட எடுக்க முடியவில்லை.......
என்னதான் இருந்தாலும்.....செல்வியை கொன்னுட்டாங்களே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.