
ஹிந்தி தொலைக்காட்சியில் ஹிட்டடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் அதே பெயரில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமலும், விறுவிறுப்பிற்கு குறைவில்லாமல் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சி மூன்று பேரை வெளியேற்றியதோடு, பதினைந்து பேரில் ஒருவரான பரணி நேற்றைய முன்தினம் சுவரேறி குதித்து தப்பித்து விட்டார். இதனால் அவர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
நாளுக்கு நாள் இதில் ஒவ்வொருவரை டார்கெட் செய்து அவர்களை அசிங்கப்படுத்துவது, அழவைப்பது, அநாகரிகமாக பேசுவது என அரங்கேறிவருகிறது. அதிலும் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர்
ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்க்கு முன் 'எச்ச' என்று சொல்லி அவமானப்பட்டார். காயத்ரியின் இந்த இழிவான செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் விஜய் தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் வலுத்து வருகிறது.
சேரி பிகேவியர் என்று பிக்பாஸில் சக பங்கேற்பாளரான ஓவியாவைத் திட்டும் காயத்திரியின் இந்த ஜாதி வன்மத்தைத் தொடர்ந்து அனுமதிக்கும் விஜய் டிவி மீது சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
மேலும், பகுத்தறிவு பேசும் கமல் ஹாசன் இது பற்றி இன்னும் வாய் திறக்காதது ஏன் என எழுத்தாளர்கள் பேஸ்புக்கில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். "சேரி பிஹேவியர்" என்ற கூற்றினை ஒளிபரப்பியதற்கு விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.